Copyright © 2006 Red Hat, Inc. மற்றும் பிற [1]
இந்த ஆவணத்தில் பின்வரும் தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன:
நிறுவல் தொடர்பான குறிப்புகள்
தொழில்நுட்ப முன்பார்வைகள்
தெரிந்த பிரச்சனைகள்
பொதுவான தகவல்கள்
சர்வதேசமயமாக்கல்
கர்னல் அறிக்கைகள்
Red Hat Enterprise Linux 4.92 பற்றிய தற்போதைய தகவல், இது இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. மேலும் தகவலுக்கு Red Hat Knowledgebase ஐ பின்வரும் URLல் பார்க்கவும்:
பின்வரும் பகுதியில் Red Hat Enterprise Linux நிறுவல் பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் இருக்கும் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.
ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux ஐ மேம்படுத்த, நீங்கள் மாற்றப்பட்ட தொகுப்புகளை மேம்படுத்த Red Hat Network ஐ பயன்படுத்தலாம்.
Red Hat Enterprise Linux 4.92 புதிதாக நிறுவ அனகோண்டாவை பயன்படுத்தலாம், அல்லது Red Hat Enterprise Linux 4லிருந்து Red Hat Enterprise Linux 4.92 க்கான சமீபத்திய மேம்படுத்தப்பட்ட பதிப்பு மேம்படுத்தலை செய்யலாம்.
நீங்கள் Red Hat Enterprise Linux 4.92 குறுவட்டுகள் உள்ளடக்கங்களை நகல் எடுக்க வேண்டுமென்றால் (எடுத்துக்காட்டாக, ஒரு பிணைய அடிப்படையான நிறுவலில்) இயக்கத்தளம் மட்டும் உள்ள குறுவட்டுக்களை மட்டும் நகலெடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும். கூடுதல் குறுவட்டு அல்லது அடுக்கிடப்பட்ட மென்பொருள் குறுவட்டுக்களை நகலெடுக்க வேண்டாம், இது அனகோண்டாவின் இயல்பான செயல்பாட்டில் கோப்புகளை மேலொழுதும். இந்த குறுவட்டுகள் Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் நிறுவப்பட வேண்டும்.
Note that the minimum RAM required to install Red Hat Enterprise Linux 4.92 has been raised to 1GB; the recommended RAM is 2GB. If a machine has less than 1GB RAM, the installation process may hang.
Red Hat Enterprise Linux 4.92 இன் ஊடக கருவியின் வடிவமைப்பு Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்புகளிலிருந்து மாற்றப்பட்டது. வேறுபட்ட மாறிகளின் எண்ணிக்கை மற்றும் ஊடக கருவிகள் இரண்டாக குறைக்கப்பட்டது:
Red Hat Enterprise Linux 4.92 சேவையகம்
Red Hat Enterprise Linux 4.92 கிளையன்
கிளைகள் தொகுபதிவகங்களை பல விருப்பங்களுக்கு கொண்டிருக்கும், இது கோர் பரிமாற்றத்தில் கூடுதல் செயல்பாடுகளை கொடுக்கும்:
Red Hat Enterprise Linux 4.92 சேவையகம்
Red Hat Enterprise Linux — முன்னிருப்பு பல தேவை சேவையக இயக்கத்தளம் 4 மெய்நிகர் நிகழ்வுகள் வரை மெய்நிகராக்க துணையை கொண்டிருக்கும்.
Red Hat Enterprise Linux மெய்நிகராக்க தளம் — கொத்திடல் மற்றும் கொத்து சேமிப்பகம் சேர்த்துdatacenter மெய்நிகராக்க இயக்கத்தளம்
Red Hat Enterprise Linux 4.92 கிளையன்
Red Hat Enterprise Linux பணிமேடை — Knowledge-worker பணிமேடை தயாரிப்பு
பணி நிலைய விருப்பம் — பொறியியல் மற்றும் வளர்ச்சி பணிநிலையங்களுக்கான கூடுதல் விருப்பங்கள்
Virtualization Option — add-on option for virtualization support
விருப்ப உள்ளடக்கங்களுடன் ஒரே கிளை அல்லது ISO உருவுடன், சந்தாவாக்கப்பட்டு நிறுவலுக்கு வழங்கப்பட்ட கூறுகளுக்கிடையே பொருத்தமில்லாமல் இருப்பதை தடுப்பது முக்கியமானதாகும். அவ்வாறு பொருத்தமில்லாமல் இருந்தால் அது பிழையாகவும், அபாயகரமானதாகவும் இருக்கலாம்.
ஒருங்கிணைக்கப்பட வேண்டிய கூறுகள் சந்தாவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, Red Hat Enterprise Linux 4.92 நிறுவல் எண்ணை தேவைப்படுத்துகிறது, இது நிறுவிக்கு சரியான தொகுப்பினை கொடுக்க கட்டமைக்க பயன்படுகிறது.
நீங்கள் நிறுவல் எண்ணை உள்ளிடாமல் தவிர்த்தால், அதன் முடிவை கோர் சேவையகம் அல்லது பணிமேடை நிறுவலில் காணலாம். கூடுதல் செயல்பாடுகள் கைமுறையாக பின்னர் சேர்க்கப்படும்.
பயன்படுத்தப்படும் முன்னிருப்பு எண்கள்:
சேவையகம்
Red Hat Enterprise Linux (Server ): 31cfdaf1358c25da
Red Hat Enterprise Linux (Server + Virtualization): 2515dd4e215225dd
Red Hat Enterprise Linux மெய்நிகராக்க தளம்: 49af89414d147589
கிளையன்
Red Hat Enterprise Linux பணிமேடை: 660266e267419c67
Red Hat Enterprise Linux Desktop / Virtualization Option: fed67649ff918c77
Red Hat Enterprise Linux பணிமேடை / பணிநிலைய விருப்பம்: da3122afdb7edd23
Red Hat Enterprise Linux Desktop / Workstation / Virtualization Option: 7fcc43557e9bbc42
Red Hat Enterprise Linux 4.92 இல், துணைபதிப்பு பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு Berkeley DB 4.3யுடன் இணைக்கப்பட்டுள்ளது. Red Hat Enterprise Linux 4யிலிருந்து மேம்படுத்தினால் ஏதாவது துணைபதிப்பு தொகுபதிவகங்கள் Berkeley DB பின்தளத்தில் பயன்படுத்தப்படும் கணினியில் உருவாக்கப்படும் "BDB" (தவிர சரியான கோப்பு அமைப்பு அடிப்படையான "FSFS" பின்புலம்), மேம்படுத்தப்பட்ட பின் சிறப்பு கவனம் தொகுபதிவகத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும். இந்தப் பணி Red Hat Enterprise Linux 4.92 மேம்படுத்துவதற்கு முன் Red Hat Enterprise Linux 4 கணினிகளுக்குப் பின்பற்றப்பட வேண்டும்:
இயக்கத்தில் உள்ள பணிகளை பணி நிறுத்தம் செய்து தொகுபதிவகத்தில் ஒரு பணியும் இல்லை என்பதை உறுதி செய்யவும் (எடுத்துக்காட்டாக, httpd or svnserve; அல்லது எந்த உள்ளமை பயனர்களும் நேரடி அணுகலில் இருக்கும் போது).
தொகுபதிவகத்தினை ஒரு பின் சேமிப்பு செய்யவும்; எடுத்துக்காட்டாக:
svnadmin dump /path/to/repository | gzip
> repository-backup.gz
svnadmin recover என்ற கட்டளையை தொகுபதிவகத்தில் இயக்கவும்:
svnadmin recover /path/to/repository
தொகுபதிவகத்தில் தேவையில்லாத பதிவு கோப்புகளை அழிக்கவும்:
svnadmin list-unused-dblogs /path/to/repository | xargs rm -vf
தொகுபதிவகத்தில் ஏதாவது மீதமுள்ள பகிரப்பட்ட-நினைவக கோப்பினை அழிக்கவும்:
rm -f /path/to/repository/db/__db.0*
தொழில்நுட்ப முன்பார்வைகள் வசதிகள் தற்போது துணை புரிவதில்லை, ஆனால் அவை இந்த வெளியீட்டில் இருக்கிறது. அவற்றில் குறிப்பிடப்பட்ட செயல்பாடுகள் சோதிக்கப்படலாம்; எனினும் அதிக முன்னுரிமையுள்ள பாதுகாப்பு பிரச்சனையால் தொழில்நுட்ப முன்பார்வைகளுக்கு கொடுக்கப்படும் ஒரே துணை பிழைத்திருத்தங்கள் ஆகும்.
அதன் முழு வளர்ச்சியிலும், தொழில்நுட்ப முன்பார்வையின் கூடுதல் பகுதிகள் பொதுவாக சோதனை செய்ய கிடைக்கும். இது இனிவரும் சிறிய அல்லது பெரிய வெளியீடுகளில் தொழில்நுட்ப முன்பார்வைக்கு முழு துணைபுரிவது Red Hat இன் உள்நோக்கமாகும்.
நிலையற்ற லினக்ஸுக்கு அமைப்பு தொகுதிகளை செயல்படுத்த Red Hat Enterprise Linux 4.92 ன் பீட்டா வெளியீடு கொண்டுள்ளது. நிலையற்ற லினக்ஸ் என்பது ஒரு கணினி எவ்வாறு இயங்கி, மேலாண்மை செய்யப்படுகிறது, எளிய வாய்ப்பளித்தலுக்கு வடிவமைத்தல் மற்றும் எளிமையாக பல கணினிகளை மாற்ற மேலாண்மை செய்தல் என்பது போன்ற புதிய எண்ணங்களை கொண்டுள்ளது. இது தயாரிக்கப்பட்ட எழுதும் கோப்புகளை குறுவட்டில் எழுத அதிக அளவு நிலையற்ற கணினிகள் மேலாண்மை செய்ய இயக்கத்தளத்தை வாசிப்பு-மட்டும் முறையில் இயங்குவது இதன் முதல் கட்ட பணியாகும்.
இதன் நடப்பு நிலை வளர்ச்சியில், நிலையற்ற வசதி உள்ளிடப்பட்ட இலக்குகளின் துணை அமைப்புகளாகும். அதே போல, தொழில்நுட்ப முன்பார்வை நிலை என அதன் செயல்திறன் பெயரிடப்பட்டுள்ளது.
பின்வருவன Red Hat Enterprise Linux 4.92 பீட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள துவக்க செயல்திறன்களின் பட்டியலாகும்:
NFS மீது ஒரு நிலையற்ற படத்தை இயக்குகிறது
NFS மீது ஒரு நிலையற்ற படத்தை சுற்றுப்பாதை வழியாக இயக்குகிறது
iSCSI இல் இயங்குகிறது
தற்போது ஒரு முதன்மை சேவையகத்திலிருந்து ஒரு உள்ளமை கோப்பு முறைமையில் தேவையான கர்னல் மாற்றங்களால் நிலையற்ற லினக்ஸ் இயங்க வாய்ப்பில்லை.
http://fedoraproject.org/wiki/StatelessLinuxHOWTO ல் நிலையற்ற குறியீடு படிப்பினை எவ்வாறு சோதிக்க வேண்டும் என்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் stateless-list@redhat.comல் சேரவும்.
GFS2 GFS கோப்பு முறையில் கூடுதல் பரிணாமம் அடிப்படையானதாகும். இது முழுமையாக செயல்பட்டாலும், GFS2 இது முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. GFS, 5 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது, இது இந்த வெளியீட்டில் கொடுக்கப்பட்ட கொத்தில்லாத தரவு கோப்பு முறைமைகளுக்கு (ரூட் மற்றும் பூட் தவிர), மற்றும் கொத்திடப்பட்ட கோப்பு முறைமை கட்டமைப்புகளில் பகிரப்பட்ட சேமிப்பகத்தில் கொத்து வடிவமைப்பு இருக்கும் போதும் முழு துணை புரிகிறது. GFS2 Red Hat Enterprise Linux 4.92 இன் அடுத்த மேம்படுத்தலில் முழு துணை புரியும் நிலையுடன் இலக்கிடப்படுகிறது. மேலும் in-place conversion வசதி gfs2_convert , GFS கோப்பு முறைமையின் மெட்டா தரவுகளை மேம்படுத்தி, GFS2 கோப்பு முறைமையாக மாற்றும்.
FS-Cache என்பது தொலை கோப்பு முறைமைகளுக்கு உள்ளமை இடையக வசதியாகும்; இது பயனர்களை NFS தரவுகளை உள்ளமைவாக ஏற்றப்பட்ட வட்டில் இடையகம் செய்ய அனுமதிக்கிறது. FS-Cache வசதியை அமைக்க, cachefilesd RPM ஐ நிறுவி/usr/share/doc/cachefilesd-<version>/README இல் உள்ள தகவல்களை பார்க்கவும்.
<version>ஐ நிறுவப்பட்ட cachefilesd தொகுப்பின் தொடர்புடைய பதிப்பால் மாற்றவும்.
Compiz என்பது ஒரு OpenGL அடிப்படையான கலவையான சாளர மேலாளர். சாதாரண சாளர மேலாண்மையின் கூடுதலாக, compiz கலவை மேலாளராக செயல்புரியும். இந்த செயலில், compiz எளிமையான மற்றும் முழுமையான பணிமேடை அனுபவத்தை கொடுக்க ஒருங்கிணைக்கிறது.
Compiz முப்பரிமாண வன்பொருள் முடுக்கத்தை பயன்படுத்தி குறும்பட சாளரங்கள் மற்றும் சாளர நிழல்கள், உயிராக்க சாளர குறுக்கம் மற்றும் மெய்நிகர் பணிமேடைகளுக்கிடையேயான ஜாலங்கள் போன்ற தோற்றங்களை சரி செய்கிறது.
நடப்பு ஒழுங்கமைவு வடிவமைப்பில் சில வரையறையால், compiz OpenGL பயன்பாடுகள் அல்லது Xv விரிவாக்கம் உள்ள பயன்பாடுகளில் சரியாக பணி புரியாது. அந்த பயன்பாடுகள் பாதிப்பில்லாத ஒழுங்கமைவு சிக்கல்களை கொண்டிருக்கும் அதனால் இந்த வசதி தற்போது துணைபுரிவதில்லை.
Red Hat Enterprise Linux 4.92 இல், EXT3 கோப்பு முறைமை கொள்ளளவு 16TBஇல் அதிகபட்சமாக 8TB க்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. இந்த செயல்திறன் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் இது Red Hat Enterprise Linux 4.92இன் வரும் வெளியீட்டுக்கு முழு துணையை கொடுக்க இலக்காக வைக்கப்படுகிறது.
bind மேம்படுத்தல் பிழை: bindஐ மேம்படுத்தும் போது, அடைவு அல்லது கோப்பு இல்லை பிழை ஏற்படும். இது நிறுவல் வரிசைபடுத்தல் பிழையால் ஏற்படுகிறது, இது GA க்கு முன்பு தெரிவிக்கப்படுகிறது. இதில் பணிபுரிய, ரூட்டாக உள் அனுமதி பெற்று /usr/sbin/bind-chroot-admin --enableஐ இயக்கவும் (நீங்கள் bind-chroot தொகுப்பினை நிறுவினால்) அல்லது /usr/sbin/bind-chroot-admin --sync (நீங்கள் caching-nameserver தொகுப்பினை நிறுவினால்).
caching-nameserver மேம்படுத்தல் பிழை: caching-nameserverஐ மேம்படுத்தும் போது, பதிவுகள் தவறான சூழல் என்ற பிழையை காட்டுகிறது. இது selinux-policy தொகுப்பின் சார்புகள் சிக்கலால் ஏற்படுகிறது, இது GAக்கு முன் தெரிவிக்கப்படுகிறது. இதில் பணி புரிய, ரூட்டாக உள் அனுமதி பெற்று /usr/sbin/bind-chroot-admin --sync ஐ இயக்கவும்.
கர்னல் தொகுதி தொகுப்புகள் (kmods) kABI சார்புகளுடன் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கும் அவை இரண்டு kernel-develகளையும் கணினியில் உருவாக்கியிருந்தால் அதனை சார்ந்த கர்னல் தொகுப்பு நிறுவப்பட்டிருக்கும். அதனால் தற்போது நிறுவப்படாத கர்னல்களுக்கு எதிராக kABI-enhanced kmods ஐ உருவாக்க முடியாது. இந்த வரையறை GAக்கு முன்னர் தெரிவிக்கப்படும்.
MegaRAID இயக்கியை பயன்படுத்தும் புரவல வட தகவிகள் "I2O" சமநிலை முறையில் இல்லாமல், "Mass Storage" சமநிலை முறையில் செயல்பட அமைக்கப்பட வேண்டும். இதனை செய்ய பின்வரும் படிநிலைகளை செய்யவும்:
MegaRAID BIOS Set Up Utilityயை உள்ளிடவும்.
தகவி அமைவுகள் பட்டியை உள்ளிடவும்.
வேறு தகவி விருப்பங்கள் கீழே, Emulation ஐ தேர்ந்தெடுத்து Mass Storage என அமைக்கவும்.
"I2O" சமநிலைக்கு தகவி சரியாக அமைக்கப்படாவிட்டால், கணினி i2o இயக்கியை ஏற்ற முயற்சிக்கும். இது செயலிழக்கப்பட்டு தகவியை சரியாக பணிபுரியவிடாமல் செய்யும்.
முந்தைய Red Hat Enterprise Linux வெளியீடுகள் பொதுவாக I20 இயக்கியை MegaRAID இயக்கியில் ஏற்ற முயற்சிக்காது. இதனால் வன்பொருள் லினக்ஸில் பயன்படுத்தும் போது "Mass Storage" சமநிலை முறையில் அமைக்கப்படாது.
ext3 / jbd kernel panic: அகதி I/O கோப்பு முறைமைகளில் தொகுதி அளவு பக்க அளவை விட சிறியதாக இருப்பதால jbd அழிக்கப்படுகிறது.
இந்த பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டு, GAஇல் சரி செய்யப்படும்.
மெய்நிகராக்க விருந்தினர் நிறுவல் பிழை: முன்னிருப்பு ஈத்தர்நெட் இணைப்பு eth1 ஆல் paravirt விருந்தினரை நிறுவினால் இயக்கி எதுவும் இல்லை என்ற பிழையை கொடுக்கிறது. இது சரியாக பணிபுரிய, eth0 ஐ முன்னிருப்பு ஈத்தர்நெட் இணைப்பாக வைக்க வேண்டும்.
இந்த பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டு, GAஇல் சரி செய்யப்படும்.
Anaconda incorrectly selects vesa driver: when Red Hat Enterprise Linux 4.92 is installed in text-only mode on a system with a geforce 5200-based video card, the vesa driver will be selected. This is incorrect, and will cause the screen to go blank once you run system-config-display. This issue will be resolved in GA.
To work around this, open xorg.conf and change the line Driver "vesa" to Driver "nv".
Virtualization paravirt guest installation failure: attempting to install a paravirt guest on a system where SELinux is enabled will fail. This issue is being investigated and will be resolved in GA.
To work around this, turn off SELinux before installing a paravirt guest.
Virtualization guest boot bug: when you install a fully virtualized guest configured with vcpus=2, the fully virtualized guest may take an unreasonably long time to boot up. This issue is being investigated and will be resolved in GA.
To work around this, disable the guest ACPI by using the kernel parameters acpi=strict or acpi=static for the virtualized kernel during grub boot.
இந்தப் பகுதியில் மற்ற பகுதிகளில் குறிப்பிடப்படாத பொது தகவல்கள் இருக்கும்.
Red Hat Enterprise Linux 4.92 இல் Xen மெய்நிகராக்க துணை i686 மற்றும் x86-64க்கு சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் மெய்நிகராக்க சூழலை மேலாண்மை செய்ய மென்பொருள் கட்டமைப்பும் உள்ளது.
Red Hat Enterprise Linux 4.92 இல் மெய்நிகராக்கத்தை செயல்படுத்துவது hypervisor ஐ அடிப்படையாக கொண்டே ஆகும், இது மிக குறைந்த மெய்நிகராக்கத்தை பாரா மெய்நிகராக்கம் வழியாக வசதிப்படுத்துகிறது. இன்டெல் மெய்நிகராக்க தொழில்நுட்பம் அல்லது AMD AMD-V கொண்ட செயலிகளால், மெய்நிகராக்கம் Red Hat Enterprise Linux 4.92 ஆனது இயக்கத்தளங்களை மாற்றப்படாததை முழு மெய்நிகராக்க முறையில் இயக்க அனுமதிக்கிறது.
Xen மற்றும் paravirtualized Linux கர்னல்களில், Red Hat Enterprise Linux 4.92 பின்வரும் வசதிகளையும் கொண்டுள்ளது:
Libvirt, ஒரு தொடர்ச்சியை கொடுக்கும் ஒரு நூலகம், இதுமெய்நிகர் கணினிகளை மேலாண்மை செய்யும் சிறிய API ஆகும்.
மெய்நிகர் கணினி மேலாளர், இது மெய்நிகர் கணினிகளை கண்காணிக்கவும் மேலாண்மை செய்யவும் உள்ள ஒரு வரைகலை வசதியாகும்.
மெய்நிகர் கணினிகள் நிறுவியில் துணைபுரியும், அவற்றுக்கு மெய்நிகர் கணினிகளை கிக்ஸ்டார்ட் செய்யவும் திறன் உள்ளது.
Red Hat Network க்கும் மெய்நிகர் கணினிகள் துணைபுரிகிறது.
Red Hat Enterprise Linux 4.92 இப்போது பதிப்பு 2.2 Apache HTTP சேவையகத்தில் சேர்க்கிறது. இந்த வெளியீடு 2.0 வரிசைகளில் பின்வருவனவற்றையும் சேர்த்து பல மேம்பாடுகளை கொண்டு வருகிறது:
மேம்படுத்தப்பட்ட இடையக சேமிப்பக தொகுதிகள் (mod_cache, mod_disk_cache, mod_mem_cache)
ஒரு புதிய வடிவமைப்பு அங்கீகாரம் மற்றும் அங்கீகார துணை, முந்தைய பதிப்புகளில் உள்ள அங்கீகார தொகுதிகளை மாற்றுகிறது
பதிலாள் ஏற்ற சமநிலை துணை (mod_proxy_balancer)
பெரிய கோப்புகள் 32-பிட் தளங்களில் கையாளப்படுகின்றன (2ஜிபிக்கும் அதிகமானது)
முன்னிருப்பு httpd கட்டமைப்பிற்கு பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது:
முன்னிருப்பாக mod_cern_meta மற்றும் mod_asis modules தொகுதிகள் ஏற்றப்படவில்லை.
இப்போது mod_ext_filter தொகுதி முன்னிருப்பாக ஏற்றப்பட்டுள்ளது.
Red Hat Enterprise Linuxஇன் முந்தைய வெளியீட்டிலிருந்து மேம்படுத்தினால், httpd கட்டமைப்பு httpd 2.2க்கு மேம்படுத்தப்படவேண்டும். மேலும் விவரங்களுக்கு, http://httpd.apache.org/docs/2.2/upgrading.html ஐ பார்க்கவும்.
எந்த மூன்றாம் நபர் தொகுதியும் httpd 2.0 க்கு தொகுக்கும் போது httpd 2.2க்கு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
PHP இன் பதிப்பு 5.1 இப்போது Red Hat Enterprise Linux 4.92ல் சேர்க்கப்பட்டுள்ளது, இது குறிப்பிட்ட செயல்திறன் மேம்பாட்டுடன் மொழிகளிலும் பல மாற்றங்களையும் கொண்டுள்ளது. புதிய பதிப்புகளை பயன்படுத்த சில உரைகளை சேர்க்க வேண்டியவரும்; PHP 4.3 லிருந்து PHP 5.1க்கு இடம்பெயர்வு செய்வதை பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்:
http://www.php.net/manual/en/migration5.php
/usr/bin/php இயக்கத்தக்கது CGI SAPI விட, இப்போது CLI கட்டளை வரி SAPIஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. /usr/bin/php-cgi ஐ CGI SAPIக்கு பயன்படுத்தவும். php-cgi இயக்கத்தக்கது FastCGI துணையுடன் சேர்க்கப்படுகிறது.
பின்வரும் விரிவாக்க தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது:
mysqli விரிவாக்கம், ஒரு புதிய இடைமுக வடிவமைப்பினை MySQL 4.1க்கு குறிப்பாக வழங்குகிறது. இது php-mysql தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
date, hash, Reflection, SPL மற்றும் SimpleXML (php தொகுப்பில் உட்பொதியப்பட்டது)
pdo மற்றும் pdo_psqlite (php-pdo தொகுப்பில்)
pdo_mysql (php-mysql தொகுப்பில்)
pdo_pgsql (php-pgsql தொகுப்பில்)
pdo_odbc (php-odbc தொகுப்பில்)
soap (php-soap தொகுப்பில்)
xmlreader மற்றும் xmlwriter (php-xml தொகுப்பில்)
dom (domxml விரிவாக்கத்தை php-xml தொகுப்பில் மாற்றுகிறது)
பின்வரும் விரிவாக்க தொகுதிகள் சேர்க்கப்படவில்லை:
dbx
dio
yp
அதிகப்பளு
domxml
PEAR பணித்திட்டம் php-pear தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்வரும் PEAR கூறுகள் மட்டுமே Red Hat Enterprise Linux 4.92இல் சேர்க்கப்பட்டது:
Archive_Tar
Console_Getopt
XML_RPC
Red Hat Enterprise Linux 4.92லில், ஒரு குறிப்பிட்ட கர்னல் வெளியீட்டு எண் இல்லாமல் நடப்பு கர்னல் ABI பதிப்பினை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட கர்னல் தொகுதி தொகுப்புகளை உருவாக்க முடியும். ஒரு ஒற்றை வெளியீட்டை விட Red Hat Enterprise Linux 4.92 கர்னல்கள் வரையறைக்கு எதிராக கர்னல் தொகுதிகளை உருவாக்க வசதி செய்கிறது, இந்த திட்ட இணைய தளம் http://www.kerneldrivers.org/ தொகுப்பு பணிகளை பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளை கொண்டுள்ளது.
Red Hat Enterprise Linux 4.92 இப்போது குறியாக்கப்பட்ட இடமாற்று பகிர்வுகள் மற்றும் ரூட்டில்லா கோப்பு முறைமைகளுக்கு அடிப்படை துணையை கொடுக்கிறது. இந்த வசதிகளை பயன்படுத்த, சரியான உள்ளீடுகளை /etc/crypttabக்கு சேர்த்து /etc/fstab இல் உருவாக்கப்பட்ட சாதனங்களை குறிப்பிடவும்.
கீழே உள்ளது /etc/crypttab உள்ளீடு:
my_swap /dev/hdb1 /dev/urandom swap,cipher=aes-cbc-essiv:sha256
இது குறியாக்கப்பட்ட தொகுப்பு சாதனம் /dev/mapper/my_swapஐ உருவாக்குகிறது, இது /etc/fstabஇல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழே உள்ளது கணினி தொகுதிக்கு /etc/crypttab இன் மாதிரி உள்ளீடு:
my_volume /dev/hda5 /etc/volume_key cipher=aes-cbc-essiv:sha256
/etc/volume_key கோப்பு ஒரு வெற்று உரை குறியாக்க விசையை கொண்டுள்ளது. நீங்களும் ஒன்றுமில்லை என விசை கோப்புப் பெயரை குறிப்பிடலாம், பதிலாக, கணினி துவக்கும் போது குறிமுறையாக்க விசையை கேட்கும்.
கோப்பு அமைப்பு தொகுதிகளை அமைக்க LUKS பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதனை செய்ய, பின்வரும் படிநிலைகளை பின்பற்றவும்:
cryptsetup luksFormatஐ பயன்படுத்தி குறிமுறையாக்கப்பட்ட தொகுதியை உருவாக்கவும்.
தேவையான உள்ளீட்டை /etc/crypttabஇல் சேர்க்கவும்.
cryptsetup luksOpenஐ பயன்படுத்தி தொகுதியை கைம்முறையாக அமைக்கவும் (அல்லது மீண்டும் தொடங்கவும்).
குறிமுறையாக்கப்பட்ட தொகுதியில் ஒரு கோப்பு முறைமையை உருவாக்கவும்.
/etc/fstabக்கு தேவையான உள்ளீட்டை சேர்க்கவும்.
mount மற்றும் umount நேரடியாக NFSக்கு துணை புரியாது; அவை NFS கிளையனில் உள் கட்டப்பட்டதாக இல்லை. ஒரு தனி nfs-utils தொகுப்பு, /sbin/mount.nfs மற்றும் /sbin/umount.nfs உதவியாளர்களுக்கு நிறுவ இதனை வேண்டும்.
CUPS அச்சடிப்பி ஒரு உள்ளமை subnet ஆல் வரைகலை கருவியான system-config-printerஆல் கட்டமைப்படுகிறது. இது CUPS இணைய இடைமுகத்தினை பயன்படுத்தியும் செய்யப்படுகிறது, http://localhost:631/.
subnetகளுக்கு இடையே இணைக்கப்பட்ட அச்சடிப்பி உலாவும் ஒலிபரப்பினை பயன்படுத்தி, கிளையனில் /etc/cups/cupsd.conf ஐ திறந்து BrowseAllow @LOCAL லிருந்து BrowseAllow ALLக்கு மாற்றவும்.
இந்த பிரிவு Red Hat Enterprise Linux 4.92ன் கீழ் மொழி துணை விவரங்களை கொண்டுள்ளது.
SCIM (Smart Common Input Method) உள்ளீடு முறை, IIIMF உள்ளீடு முறையை ஆசிய முற்றும் பிற மொழிகளுக்கும் இந்த வெளியீட்டில் மாற்றுகிறது. முன்னிருப்பு GTK உள்ளீடு முறை தொகுதி SCIM க்கு Qtயில் scim-bridgeஆல் வழங்கப்படுகிறது, இது scim-qtimm ஆல் வழங்கப்படுகிறது.
கீழே பல்வேறு மொழிகளின் முன்னிருப்பு குறுக்குவிசைகள் உள்ளன:
அனைத்து மொழிகள்: Ctrl-Space
ஜப்பானிஸ்: Zenkaku-Hankaku or Alt-`
கொரியன்: Shift-Space
SCIM நிறுவப்பட்டிருந்தால், அது அனைத்து பயனர்களுக்கும் முன்னிருப்பாக இயக்கப்பட்டிருக்கும்.
பெரும்பாலான ஆசிய மொழிகளுக்கு முன்னிருப்பாக SCIM நிறுவப்பட்டிருக்கும். இல்லையெனில், நீங்கள் தொகுப்பு மேலாளரால் (pirut) "மொழிகள் " கூறுகளை பயன்படுத்தி கூடுதல் மொழி துணையை நிறுவலாம், அல்லது இந்த கட்டளையை இயக்கவும்:
su -c 'yum groupinstall <language>-support'
மேற்கண்ட கூற்றின் படி, மொழி அசாமிஸ், பெங்காலி, சீனம், குஜராத்தி, இந்தி, ஜப்பானிஸ், கன்னடம், கொரியன், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சிங்களம், தமிழ், தாய் அல்லது தெலுங்கு போன்றவையாக இருக்கலாம்.
ஒரு புதிய பயனர் கட்டமைப்பு கருவி im-chooser சேர்க்கப்பட்டுள்ளது, இது உங்களை பணிமேடையில் உள்ளீடு முறைகளின் பயன்பாட்டை எளிதாக செயல்படுத்த அல்லது செயல்நீக்க அனுமதிக்கிறது. எனவே SCIM உங்கள் பணிமேடையில் நிறுவப்பட்டு அதனை இயக்க வேண்டாம் எனில், im-chooserஐ பயன்படுத்தி செயல்நீக்கலாம்.
X startupல், xinput.sh இப்போது மூலங்கள் ~/.xinputrc அல்லது /etc/X11/xinit/xinputrc ~/.xinput.d/ அல்லது /etc/xinit/xinput.d/ன் கீழ் கட்டமை கோப்புகளை தேடுகிறது.
Red Hat Enterprise Linux 4.92ல் Firefox Pango வால் உருவாக்கப்பட்டிருக்கும், இது Indic மற்றும் சில CJK போன்ற உரைகளுக்கு துணை புரிகிறது.
Pangoவின் பயனை செயல்நீக்க, Firefox ஐ துவக்குவதற்கு முன் MOZ_DISABLE_PANGO=1ஐ உங்கள் சூழலில் அமைக்கவும்.
தடிம தோற்றம் இல்லாத synthetic emboldening எழுத்துருக்களுக்கு தடிம தோற்றம் இப்போது துணை புரிகிறது.
சீனத்திற்கு புதிய எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளது: AR PL ShanHeiSun Uni (uming.ttf) மற்றும் AR PL ZenKai Uni (ukai.ttf). முன்னிருப்பு எழுத்துரு AR PL ShanHeiSun Uni, இது உட்பொதியப்பட்ட பிட்மேப்களை கொண்டுள்ளது. நீங்கள் வெளிக்கோடு glyphகளை விரும்பினால், பின்வரும் பிரிவினை ~/.font.conf கோப்பில் சேர்க்கவும்:
<fontconfig> <match target="font"> <test name="family" compare="eq"> <string>AR PL ShanHeiSun Uni</string> </test> <edit name="embeddedbitmap" mode="assign"> <bool>false</bool> </edit> </match> </fontconfig>
முன்னிருப்பாக Gtk2 சூழல் பட்டி IM துணை பட்டி தோன்றாது. நீங்கள் பின்வரும் கட்டளையை கொடுத்து அதனை செயல்படுத்த வேண்டும்:
gconftool-2 --type bool --set '/desktop/gnome/interface/show_input_method_menu' true
CJK (சீனம், ஜப்பானிஸ் மற்றும் கொரியன்) rendering துணை அனகோண்டா உரை நிறுவலிலிருந்து நீக்கப்பட்டது. உரை நிறுவல் முறை எதிரிடையானதால் GUI நிறுவல் முறையாக மாற்றப்பட்டது, VNC மற்றும் கிக்ஸ்டார்ட் முறைகள் விரும்பப்படுகிறது.
Red Hat Enterprise Linuxஇல் பின்வரும் தொகுப்புகள் எதிரிடையாகவும் நீக்க திட்டமிடப்பட்டுள்ளது:
gtk+
gdk-pixbuf
glib
இந்த தொகுப்புகள் gtk2 வரிசை மூலம் எதிரிடையாக உள்ளது, இது நல்ல செயல்பாட்டினை குறிப்பாக சர்வதேசமயமாக்கல் மற்றும் எழுத்துரு கையாளுதலில் வழங்குகிறது.
If you need to display Chinese, Japanese, or Korean on the console, you need to setup a framebuffer. To do this, install bogl and bogl-bterm, and run bterm on the framebuffer. Note that the kernel framebuffer module depends on the graphics chipset in your machine.
இந்த பிரிவு 2.6.9 (Red Hat Enterprise Linux 4 ஐ அடிப்படையாக கொண்டு) மற்றும் 2.6.18க்கு இடையேயான வித்தியாசத்தை (Red Hat Enterprise Linux 4.92 மரபாக இருக்கும்) ஜூலை 12, 2006ல் குறிக்கிறது. நாம் இப்போது தற்போது பணிபுரியும் கூடுதல் வசதிகள் பணிகள் 2.6.18 அல்லது 2.6.19இல் தமாதமாக இங்கு தோன்றுவது முன்னிலைப்படுத்தப்படவில்லை. மாற்றாக, இந்த பட்டியல் வரும் Linus treeல் இப்போது பணியிலுள்ளவற்றை தவிர்த்து ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்த பட்டியல் முடிவானது இல்லை அல்லது புதிய Red Hat Enterprise Linux 4.92 ன் வசதிகளின் பட்டியல் இல்லை, Red Hat Enterprise Linux 4.92யிலிருந்து எதிர்ப்பார்க்கப்பட்டவை நல்ல முழுபார்வை கொண்டுள்ளது. மேலும் இந்த பிரிவு இனிவரும் மாற்றங்களை மட்டும் கொண்டிருக்கும் என்பதை குறித்து கொள்ளவும் மற்றும் இது முழுமையாக முடிக்கப்பட்டதாக இல்லை. இது பல குறைந்த அளவு வன்பொருள் துணை மற்றும் சாதன இயக்கி தகவலையும் கொண்டிருப்பதில்லை.
பின்வருவன ஒரு நல்ல மூலத்தின் அடுத்த நிலையின் விரிவான பார்வை:
http://kernelnewbies.org/LinuxChanges
Big Kernel Lock preemption (2.6.10)
Voluntary preemption patches (2.6.13) (subset in Red Hat Enterprise Linux 4)
Lightweight userspace priority inheritance (PI) futexes க்கு துணைபுரிகிறது, உண்மை நிலை பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது (2.6.18)
New 'mutex' locking primitive (2.6.16)
High resolution timers (2.6.16)
மாறாக, kernel/timer.c ல் குறைந்த-திரைதிறன் நேர முடிதல் API செயல்படுத்தப்பட்டுள்ளது, கணினி கட்டமைப்பு மற்றும் செயல்திறனை பொருத்து hrtimers நல்ல திரைதிறன் மற்றும் துல்லியத்தை கொடுக்கிறது. தற்போது இந்த நேரங்காட்டிகள் itimers, POSIX timers, nanosleep மற்றும் in-kernel நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
Modular, on-the-fly switchable I/O schedulers (2.6.10)
இது on-the-fly Red Hat Enterprise Linux 4இல் பூட் விருப்பத்திற்கு மட்டும் உள்ளது (per-queueக்கு பதிலாக system-wideயும் கொண்டுள்ளது)
Conversion to 4-level page tables (2.6.11)
x86-64 ன் நினைவகத்தை 512G லிருந்து 128TB க்கு அதிகரிக்க அனுமதிக்கிறது
New Pipe implementation (2.6.11)
30-90% செயல்திறன் pipe bandwidthஇல் மேம்படுத்தப்பட்டுள்ளது
எழுத்தர்களை தடுப்பதை விட சுற்று இடையக சேமிப்பகம் சேமிப்பை அதிகமாக அனுமதிக்கிறது
"Big Kernel Semaphore": semaphoreக்கு பெரிய கர்னல் பூட்டை மாற்றுகிறது
உள்ளமைவுகளை அதிகமான பூட்டு நேரத்தால் குறைகிறது மற்றும் தாமாக மேம்பாடுகளை சேர்க்கிறது
X86 "SMP alternatives"
இருக்கும் தளத்திற்கு ஏற்ப ஒரு ஒற்றை கர்னல் படத்தை இயங்கு நேரத்தில் ஒருங்கிணைக்கிறது
kernel-headers தொகுப்புகள்
glibc-kernheaders தொகுப்புகளை மாற்றுகிறது
புதிய headers_installக்கு 2.6.18 கர்னலில் சரியான பொருந்துதலை கொடுக்கிறது
குறிக்கக்கூடிய கர்னல் தலைப்பு தொடர்பான மாற்றங்கள்:
நீக்கப்பட்ட <linux/compiler.h> தலைப்பு கோப்பு, இதனால் எந்த பயனும் இல்லை
நீக்கப்பட்ட _syscallX() மேக்ரோக்கள்; பயனர் இடம் C நூலகத்திலிருந்துsyscall() ஐ பயன்படுத்த வேண்டும்
நீக்கப்பட்ட <asm/atomic.h> மற்றும் <asm/bitops.h> தலைப்பு கோப்புகள்; C மொழி மாற்றி அதன் சொந்த அணு உள் அமைக்கப்பட்ட செயல்பாட்டுகளை கொடுக்கிறது. இது பயனர் இட நிரல்களுக்கு பொருத்தமானது
உள்ளடக்கம் முன்பு #ifdef __KERNEL__ ஆல் பாதுகாக்கப்பட்டது இப்போது முழுவதும் unifdef கருவியால் நீக்கப்பட்டது; பயனர்இடத்தைப் பாதிக்காமல் தெரியாத பகுதிகளை பார்வையிட __KERNEL__ஐ குறிப்பிடுகிறது
பக்க அளவு மாற்றங்களால், சில வடிவமைப்புகளில்PAGE_SIZE மேக்ரோ நீக்கப்பட்டது, பயனர் இடம் sysconf (_SC_PAGE_SIZE) அல்லது getpagesize() ஐ பயன்படுத்துகிறது
சரியான பயனர் இடத்தை கொடுக்க, பல தலைப்பு கோப்புகள் மற்றும் தலைப்பு உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன
kexec and kdump (2.6.13)
netdump என்பது kexec மற்றும் kdump ஆல் மாற்றப்பட்டது, இது விரைவான துவக்கம் மற்றும் சரியான கர்னல் vmcores உருவாக்கத்தை சோதனை தேவைக்கான செய்வதை உறுதிபடுத்துகிறது. கட்டமைப்பு தகவல்கள் பற்றிய மேலும் விவரங்களுக்குusr/share/doc/kexec-tools-<version>/kexec-kdump-howto.txt ஐ பார்க்கவும் (<version>ஐ நிறுவப்பட்ட kexec-tools தொகுப்பின் தொடர்புடைய பதிப்போடு மாற்றவும்).
inotify (2.6.13)
பின்வரும் syscalls வழியாக பயனர் இடைமுகம் உள்ளது: sys_inotify_init, sys_inotify_add_watch, and sys_inotify_rm_watch.
Process Events Connector (2.6.15)
அறிக்கைகள் fork, exec id மாற்றம், மற்றும் பயனர் இடத்திலிருந்து அனைத்து பணி நிகழ்வுகளை விட்டு வெளியேறுதல்.
பயன்பாடுகளை இந்த நிகழ்வுகளை accounting/auditingயும் சேர்த்து பயனுள்ளதாக கருதுகின்றன,(எடுத்துக்காட்டு, ELSA), கணினி செயல் கண்காணித்தல் (எடுத்துக்காட்டு, top), பாதுகாப்பு, மற்றும் மூல மேலாண்மை (எடுத்துக்காட்டு, CKRM). Semantics per-user-namespace போன்ற வசதிகளில் தொகுதிகளை உருவாக்குகின்றன, "கோப்புகளை அடைவுகளாக" மற்றும் பதிக்கப்பட்ட கோப்பு முறைமைகள்.
பொதுவான RTC (RealTime Clock) subsystem (2.6.17)
splice (2.6.17)
புதிய IO தொழில்நுட்பம் பயன்பாடுகளுக்கிடையே தரவுகளை மாற்றும் போது தரவு நகல்களை தவிர்க்கிறது.
Block queue IO tracing support (blktrace). இது தடுக்கப்படும் சாதன வரிசையில் ஏதாவது போக்குவரத்து நிறுத்தம் ஏற்பட்டுள்ளதா என்பதை பயனர் பார்க்க அனுமதிக்கிறது. வேறு வார்த்தையில், உங்கள் வட்டுகள் என்ன செய்கின்றன என்பது பற்றிய விரிவான புள்ளிவிவரத்தை கொடுக்கிறது. (2.6.17)
EXT3
ext3 block reservation (2.6.10) (in Red Hat Enterprise Linux 4)
ext3 online resizing patches (2.6.10) (in Red Hat Enterprise Linux 4)
ext3ல் பெரிய inode விரிவாக்கப்பட்ட கூறுகளுக்கான துணை: சில நேரங்களில் இடைவெளிகளை குறைத்து, செயல்திறனை அதிகரிக்கிறது (2.6.11)
Device mapper multipath support (Red Hat Enterprise Linux 4)
ACL துணை NFSv3க்கு மற்றும் NFSv4க்கு (2.6.13)
NFS: பெரிய அளவில் வாசித்தல் மற்றும் எழுதுதலை வடங்களில் துணைபுரிகிறது (2.6.16)
லினக்ஸ் NFS கிளையன் 1MB பரிமாற்று அளவுக்கு இப்போது துணைபுரிகிறது.
FUSE (2.6.14)
பயனர் இட நிரலில் ஒரு முழு செயல்பாடு கோப்பு முறைமை செயல்படுத்த அனுமதிக்கிறது
VFS மாற்றங்கள்
"shared subtree" சேர்க்கைகள் இணைக்கப்பட்டன. (2.6.15)
Big CIFS update (2.6.15)
Kerberos மற்றும் CIFS ACL க்கு பல செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் துணைகளை கொடுக்கின்றன
autofs4 - பயனர் இடைவெளி autofs க்கு நேரடி ஏற்றல் துணையை மேம்படுத்துகிறது(2.6.18)
cachefs core enablers (2.6.18)
முகவரி இடைவெளி குறிப்பில்லாக்கம்
இந்த இணைப்புகளை செயல்படுத்தினால், ஒவ்வொரு பணியின் வரிசையும் குறிப்பில்லாத இடத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் mmap()பயன்படுத்தும் ஆரம்ப நினைவக பகுதியும் (அனைத்து பகுதிகளிலும், பகிரப்பட்ட நூலகங்கள் எங்கு செல்லும்) குறிப்பில்லாமல் இருக்கும்(2.6.12) (Red Hat Enterprise Linux 4 இல்).
பல நிலை பாதுகாப்பு SELinux (2.6.12)ல் செயல்படுத்தப்பட்டுள்ளது
Audit துணை அமைப்பு
support for process-context based filtering (2.6.17)
more filter rule comparators (2.6.17)
TCP/UDP getpeersec: ஒரு பாதுகாப்பு-விழிப்பு பயன்பாட்டினை செயல்படுத்தி ஒரு குறிப்பிட்ட TCP அல்லது UDP socketஐ பயன்படுத்தி IPSecக்கு பாதுகாப்பு கூட்டமைப்புக்கு பாதுகாப்பு சூழலை அளிக்கிறது (2.6.17)
சேர்க்கப்பட்ட பல TCP நெருக்க தொகுதிகள் (2.6.13)
IPv6: பல புதிய sockopt / ancillary தரவுகளை கூடுதல் API (2.6.14)யில் துணை புரிகிறது
IPv4/IPv6: UFO (UDP Fragmentation Offload) Scatter-gather approach (2.6.15)
UFO என்பது லினக்ஸ் கர்னல் பிணைய வரிசையை IP ஒருங்கிணைத்தல் செயல்பாட்டில் பெரிய UDP datagramஐ வன்பொருளில் நிறுத்தும் ஒரு வசதியாகும். இது பெரிய UDP datagramஐ MTU அளவு பாக்கெட்டுகளில் அதிகமாக இருக்கும் ஒருங்கிணைப்பு வரிசையை குறைக்கிறது.
சேர்க்கப்பட்ட nf_conntrack subsystem (2.6.15)
netfilterஇல் உள்ள ஏற்கெனவே உள்ள இணைப்புகளை தேடும் துணை அமைப்பு மட்டுமே ipv4ஐ கையாளும். ipv6ல் சேர்க்கப்பட்ட இணைப்புகளை தேட இரண்டு விருப்பங்கள் உள்ளன; இவை அனைத்து ipv4 இணைப்பு தேடும் குறியீட்டை ipv6 எண்ணும் பகுதியாக நகலெடுக்கும், அல்லது(இந்த இணைப்பில் விருப்பங்கள் எடுக்கப்பட்டிருக்கும்) ipv4 மற்றும் ipv6 ஆகிய இரண்டையும் கையாளும் பொதுவான அடுக்கினை வடிவமைக்கின்றன மற்றும் ஒரே ஒரு துணை நெறிமுறை மட்டுமே (TCP, UDP, போன்றவை.) இணைப்பு தேடலில் உதவி தொகுதியைக எழுத தேவைப்படுகிறது. உண்மையில், nf_conntrack எந்த அடுக்கு 3 நெறிமுறையில் பணிபுரியும் திறனை பெற்றிருக்கும்.
IPV6
RFC 3484 compliant source address selection (2.6.15)
Router Preferenceக்கு துணை சேர்க்கப்பட்டது (RFC4191) (2.6.17)
சேர்க்கப்பட்ட Router Reachability Probing (RFC4191) (2.6.17)
மேம்படுத்தப்பட்ட வடமில்லாதது
வன்பொருள் crypto மற்றும் ஒருங்கிணைப்பு offload துணை
QoS (WME) துணை, "wireless spy support"
கலந்த PTK/GTK
CCMP/TKIP துணை மற்றும் WE-19 HostAP துணை
BCM43xx வடமில்லா இயக்கி
ZD1211 வடமில்லா இயக்கி
WE-20, பதிப்பு 20 இன் வடமில்லா விரிவாக்கங்கள் (2.6.17)
வன்பொருள் தேவைப்படாத மென்பொருள் MAC layer, "Soft MAC" (2.6.17) சேர்க்கப்பட்டது
LEAP அங்கீகார வகை சேர்க்கப்பட்டது
generic segmentation offload (GSO) (2.6.18) சேர்க்கப்பட்டுள்ளது
சில சமயங்களில், ethtoolஇன் வழியாக செயல்படுத்தும் போோது செயல்திறனை அதிகரிக்கலாம்
SELinuxக்கு புதிய பாக்கெட்டுகளுக்கான அணுகல் கட்டுப்பாட்டினை சேர்க்கிறது, மேலும் பழைய பாக்கெட் கட்டுப்பாடுகளை மாற்றுகிறது.
கோர் பிணையத்திற்கு secmark துணையை சேர்த்து, பாதுகாப்பு துணை அமைப்புகளை பிணைய பாக்கெட்டுகளில் பாதுகாப்பு குறியிடல் செய்ய அனுமதிக்கிறது (2.6.18).
DCCPv6 (2.6.16)
இந்த பிரிவு பலவற்றுள் மிகவும் பொதுவான வசதிகளை மட்டுமே எண்ணும்.
x86-64 clustered APIC support (2.6.10)
Infiniband support (2.6.11) (பெரும்பாலும் Red Hat Enterprise Linux 4இல்)
Hot plug
சேர்க்கப்பட்ட பொதுவான நினைவகம் சேர்/நீக்கு மற்றும் நினைவகத்தின் துணையான செயல்பாடுகள் hotplug (2.6.15)
SATA/libata மேம்படுத்தல்கள், கூடுதல் வன்பொருள் துணை (Red Hat Enterprise Linux 4 இல்)
ஒரு முழுமையான மீண்டும் வேலை செய்யப்பட்ட libata பிழை கையாளி. இந்த அனைத்து வேலையின் தீர்வு ஒரு SATA துணை அமைப்பாகும், இது பெரிய அளவிலுள்ள பிழைகளை சரி செய்யும்.
Native Command Queuing (NCQ). NCQ என்பது SATA பதிப்பின் ஒட்டு கட்டளையின் வரிசை - பல I/O கோரிக்கையை ஒரே இயக்கியில் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் திறன். (2.6.18)
Hotplug துணை (2.6.18)
EDAC துணை (2.6.16) (in Red Hat Enterprise Linux 4)
EDAC இலக்கு கணினிக்குள் வரும் சிக்கல்களை கண்டுபிடித்து பிழையை அறிக்கையிடும்.
ஒரு புதிய ioatdma இயக்கி Intel(R) I/OAT DMA engine (2.6.18) க்கு சேர்க்கப்பட்டது
Cpusets (2.6.12)
Cpusets இப்போது ஒரு தொழில்நுட்பத்தை ஒரு ஜோடி CPUகள் மற்றும் நினைவக முனைகளை ஒரு ஜோடி பணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. Cpusets கூறுகள் CPU மற்றும் பணிகளின் நினைவகம் பணியின் நடப்பு cpuset இல் மூலமாக இருக்கிறது. அதற்கு மேல் ஏற்கெனவே உள்ளவை, பெரிய கணினிகளில் மாறும் பணிகளை மேலாண்மை செய்யும் தேவையானவை உள்ளன.
NUMA-aware slab allocator (2.6.14)
இது பல் முனைகளில் slabகளை உருவாக்கி அவற்றை ஒருங்கிணைப்பு இடங்களில் உள்ளமைத்து மேலாண்மை செய்கிறது. ஒவ்வொரு முனையும் அதன் சொந்த பகுதி, வெற்றிட மற்றும் முழு slab களின் பட்டியலை கொண்டுள்ளது. ஒரு முனைக்கு அனைத்து பொருள் ஒதுக்கீடு முனை slab பட்டியலில் குறிப்பிடுகிறது.
Swap migration (2.6.16)
பணி இயக்கத்தில் இருக்கும் போது மாற்று நகர்தல் முனைகளுக்கிடையே பக்கங்களின் இடங்கள் ஒரு NUMA கணினியில் நகர அனுமதிக்கும்.
Huge pages (2.6.16)
பெரிய பக்கங்களில் NUMA கொள்கைக்கு துணை போகிறது: நினைவக கொள்கை அடுக்கிலுள்ள huge_zonelist() செயல்பாடு NUMA தொலைவால் வரிசைப்படுத்தப்பட்ட ஒரு மண்டலங்களின் பட்டியலை கொடுக்கிறது. பெரிய பக்கத்திலுள்ள ஒரு மண்டலத்தின் பட்டியல் ஒரு மண்டலத்திற்காக காத்திருக்கும் போது hugetlb அடுக்கு நகரும். ஆனால் அதுவும் நடப்பு cpuset ன் nodeset ல் இருக்கும்.
hugepages இப்போது cpusetsக்கு கட்டுப்படுகிறது.
Per-zone VM counters
மண்டல அடிப்படையான VM புள்ளிவிவரங்களை கொடுக்கிறது, இதனால் ஒரு மண்டலம் என்ன நிலை நினைவகத்தை கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.
Netfilter ip_tables: NUMA-aware allocation. (2.6.16)
Multi-core
கோர்களுக்கிடையே பகிரப்பட்ட இடையக சேமிப்பகத்தை multi-core யுடன் குறிக்க ஒரு புதிய திட்ட களத்தை சேர்த்தது. இது சில கணினிகளில் சிறந்த cpu திட்டமிடுதலை செய்து சில நேரங்களில் பெரிய அளவில் செயல்திறனை அதிகரிக்கிறது (2.6.17).
CPU திட்டமிடுதலின் மின் சேமிப்பு கொள்கை - multicore/smt cpuகளுக்கு, வேறு தொகுப்புகள் வேலை செய்யும் போது, அனைத்து CPUகளுக்கும் வேலையை பகிர்ந்து கொடுக்காமல் சில தொகுப்புகளை வெறுமையாக்கி மின் சேமிப்பு செய்கிறது.
( amd64 )
[1] இந்த விவரங்கள் Open Publication License, v1.0 இன் அடிப்படையிலான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி வழங்கப்பட்டிருக்கலாம், இது http://www.opencontent.org/openpub/ இல் உள்ளது.